salman khan asked sorry to dog

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தல் மிகவும் பிரபலமான ஒன்று. இதனுடைய இரண்டாவது சீசன் வரும் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என செய்திகள் வெளியாகி உள்ளது .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சீசன் இரண்டில் நடிகர் அரவிந்த்சாமி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பார் எனவும் சில நாட்களுக்குமுன் செய்திகள் கசிந்தது.

இதே போன்று இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கு வருகிறார்.

சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்வில்,போட்டியாளர்களில் ஒருவரான ஜுபைர் கானை "நாய்" என திட்டினார். இந்த வாரம் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சல்மான் 'நாய் என கூறியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்' என்று கூறினார்.

இதனால் பெருமூச்சி விட்ட மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஜுபைர் கானிடம்தான் சல்மான் மன்னிப்பு கேட்கிறார் என நினைத்தனர்.ஆனால் பின்னர்தான் தெரிந்தது அவர் ஜுபைர் கானிடம் மன்னிப்பு கேட்டவில்லை, நாயிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று.....

இதனை அறிந்த ஜுபைர் கான் மற்றும் மற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் கூட கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியை பொதுமக்களே காரி துப்பினார்கள்....ஹிந்தியில் ஜுபைர்கானை, சல்மான் கான் காரி துப்பி உள்ளார்...அதாவது நாய் என திட்டி......ஒட்டுமொத்தமாக அசிங்கப்படுத்திவிட்டார்.அது சரி....இந்த வார்த்தையை தமிழில் ஜூலியை கூட இப்படி சொன்னது இல்லை ....ஆனால் இந்தியில் இப்படி நடந்து விட்டதே என ரசிகர்களும், பொதுமக்களும், நெருங்கிய சினி துறையினரும் அதிர்ந்து விட்டனராம்....