Salem Corporation Election Result 2022 : யார் சேலம் மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சேலம் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகள் உள்ளன. சேலம் மாநகராட்சியில் உள்ள மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் அஸ்தம்பட்டி என நான்கு மண்டலங்கள் உள்ளது. மாநகராட்சியில் உள்ள 60 கவுன்சிலர் பதவிக்காக 618 பேர் போட்டியிடுகின்றனர்.
தற்போதைய நிலவரத்தின் படி சேலம் மாநகராட்சியில் 3 வார்டுகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. வேறு எந்த கட்சியும், எந்த வார்டிலும் முன்னணிக் கணக்கை இன்னும் தொடங்கவில்லை.
சேலம் மாநகராட்சி மேயராக திமுக சார்பில் 2வது வார்டில் போட்டியிடும் முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம், 15வது வார்டு போட்டியிடும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட உமாராணி, 26வது வார்டில் போட்டியிடும் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கலையமுதன், 28வது வார்டில் போட்டியிடும் ஜெயகுமார் மற்றும் 52வது வார்டில் போட்டியிடும் அசோகன் உள்ளிட்டோருக்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு மேயர் பதவி கொடுக்கப்படும் என திமுக வட்டாரம் பேசி வருகிறது.
துணை மேயர் பதவிக்கு திமுக கூட்டணியில் உள்ள 36வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் என்.ஆர்.சுரேஷ் மற்றும் 7வது வார்டில் போட்டியிடும் சாரதா தேவி உள்ளிட்டோருக்கு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் 21வது வார்டில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலத்தின் மகன் ஜனார்த்தனன், 34வது வார்டில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜின் மனைவி கோகிலா, 3வது வார்டில் போட்டியிடும் காட்சியின் மூத்த நிர்வாகி AKSM.பாலு மற்றும் 57-வது வார்டில் போட்டியிடும் சண்முகம் போன்றோருக்கு அதிமுகவின் மேயராக வேட்பாளராக முன்மொழிய அதிக வாய்ப்புகள் உள்ளது. துணை மேயர் பதவிக்கு 40வது வார்டில் போட்டியிடும் உமா ராஜ், 36வது வார்டில் போட்டியிடும் அம்மாபேட்டை கழக செயலாளர் யாதவ மூர்த்தி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு உள்ளது.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சேலம் மாநகராட்சியில் 9 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.
