நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.. குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு..
ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு வரை ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளியின் விலை, கடந்த வாரம் கிடுகிடுவென உயர்ந்து ரூ.70-க்கு விற்கப்பட்டது. இந்த விலை மேலும் உயர்ந்து ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.100-க்கி விற்பனையாகிறது. ஒரு சில இடங்களில் ரூ.120 – ரூ. 160 வரை கூட க்கு கூட தக்காளி விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு 1000 டன் வரை தக்காளி வரும் என்றும், ஆனால் தற்போது தக்காளி வரத்து 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளதால் தான் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரத்து குறைவு, கோடை மழை உள்ளிட்ட காரணங்கள் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது குறித்து இன்று தலைமை செயலத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ அகில இந்திய அளவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் 82 நியாயவிலைக்கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். பண்ணை பசுமை கடைகளை போல ரேஷன் கடைகளிலும் கிலோ ரூ. 60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும். வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். அதன்படி வட சென்னையில் 25, மத்திய சென்னை 22, தென் சென்னை 35 என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்தார்.
- increase in tomato price
- today tomato market price
- today tomato price
- tomato
- tomato market price today
- tomato price
- tomato price hike
- tomato price hike india
- tomato price hike news
- tomato price hike reason
- tomato price huge hike
- tomato price in delhi
- tomato price in india
- tomato price increase
- tomato price rise
- tomato price today
- tomato price today madanapalle
- tomato prices
- tomato prices hiked
- tomatoes price hike