Asianet News TamilAsianet News Tamil

டிச.10 அன்று நடைபெறவிருந்த ஊரக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு... புயல் எச்சரிக்கை காரணமாக தேதி மாற்றம்!!

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக டிச.10 ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

rural aptitude test scheduled to be held on dec 10 postponed due to montas cyclone
Author
First Published Dec 8, 2022, 4:57 PM IST

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக டிச.10 ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்கக்கலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறியுள்ளதை அடுத்து அதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மணிக்கு 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புதுவை ஸ்ரீஹரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எச்சரிக்கை… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்ததெந்த மாவட்டங்கள்?

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் நாளை எந்த இடத்தில் கரையை கடக்கிறது..? தமிழத்திற்கு ரெட் அலர்ட்டா.? - வானிலை மையம் தகவல்

தேர்வு முடிவு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios