Asianet News TamilAsianet News Tamil

மாண்டஸ் புயல் நாளை எந்த இடத்தில் கரையை கடக்கிறது..? தமிழத்திற்கு ரெட் அலர்ட்டா.? - வானிலை மையம் தகவல்

மாண்டிஸ் புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே நாளை கரையை கடக்க உள்ளதாகவும், இதன் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Cyclone Mantus is expected to make landfall tomorrow night, the Meteorological Department said
Author
First Published Dec 8, 2022, 2:26 PM IST

மாண்டஸ் புயல் எச்சரிக்கை

வங்ககடலில் உருவாகியுள்ள மாண்டிஸ் புயல் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கு 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.  இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாக்கு இடைப்பட்ட பகுதியில் இது கரையை கடக்கக்கூடும் எனவும் இதன் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார். 

மிரட்டும் மாண்டஸ் புயல்.. வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

Cyclone Mantus is expected to make landfall tomorrow night, the Meteorological Department said

3 நாட்களுக்கு மழை

கனமழை பொறுத்தவரையில் 8 தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் ஓர் இடங்களில் கன மழை முதல் மிக மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரே இடங்கள் தர்மபுரி சேலம் நாமக்கல் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழையும் செய்யப்படும். மேலும், 9 ஆம்  தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,, புதுவை ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 

Cyclone Mantus is expected to make landfall tomorrow night, the Meteorological Department said

 நாளை இரவு கரையை கடக்கிறது

10 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,  விழுப்புரம் கள்ளக்குறிச்சி சேலம் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றைப் பொருத்தவரை இன்று தமிழை கடற்கரை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும்,  சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கக்கூடும். அதேபோல, நாளை காலை முதல் மாலை வரை வட தமிழக பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும்.  மேலும், 9 தேதி மாலை முதல் 10ஆம் தேதி காலை வரை உள்ள காலகட்டத்தில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் சமயத்தில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். 

ஆளுநரை சந்தித்த ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகள்..! திடீர் ஆலோசனை.? என்ன காரணம் தெரியுமா..?

Cyclone Mantus is expected to make landfall tomorrow night, the Meteorological Department said

புயலாக கரையை கடக்கும் மாண்டஸ்

அதேபோல,  வட தமிழக கடற்கரை ஓட்டிய தமிழக கடலோரப் பகுதிகள், மன்னர் வளைகுடா பகுதிகளில் இன்று சூறைக்காற்று மாணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும், சமயத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும். நாளை 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் சமயங்களை 70 கிலோமீட்டர் வீசப்படும் என்றார்.  கடல் அலையை பொருத்தவரை பத்தாம் தேதி வரை தமிழக கடற்கரை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் கொந்தளிப்புடன் காணப்படும் எனவே மீனவர்கள் பத்தாம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் சென்னை பொறுத்த வரையிலும் அடுத்து வரும் இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும், தற்போதைய நிலவரப்படி புயலாக தான் கரையை கடக்கும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

நள்ளிரவில் உருவானது மாண்டஸ் புயல்.! ஊட்டி போல் மாறிய சென்னை..! தரைக்காற்று வீச்சு அதிகரிப்பு
 

Follow Us:
Download App:
  • android
  • ios