திண்டுக்கல்

கருணாநிதி குறித்து பரவும் வதந்திகளால் தேநீர் கடை முதல் பெரிய பெரிய உணவகங்கள் வரை பூட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானல் சுற்றுலாப் பகுதி என்பதே மறக்கும் அளவுக்கு வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளும் எதாவது நடந்து விடுமோ? என்று பயந்து வருகையைக் குறைத்துக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல இயங்கின, ஆனால், அதில் பயணிக்க தான் யாருமில்லாமல் வெறுமையாக இருந்தது.

இப்படி ஞாயிற்றுக் கிழமை மற்றும் திங்கள்கிழமை என இரண்டு நாள்களும் இங்கு வியாபாரமும் கவலைக்கிடமாக உள்ளது.