ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ...!

நாடே பெருத்த எதிர்பார்ப்பில் ஜல்லிகட்டுக்காக காத்திருக்கும் தருவாயில், தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா முழுக்க ஆங்காங்கே, ஜல்லிகட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜல்லிகட்டுக்கு , தற்போது ஆதரவு குரலை கொடுத்துள்ளது. அதன்படி ,

சங் பரிவார் அமைப்புகள்” :

”சங் பரிவார் அமைப்புகள்“ ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஆதரவு குரலை கொடுத்துள்ளது. மேலும் ஜல்லிகட்டுக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளது இந்த அமைப்பு. அதன்படி, ஒட்டகம்,மாடு ,எருமை என விலங்குகளை கொன்று, கொண்டாடப்படுவது ஜல்லிக்கட்டு இல்லை. மாறாக , தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு என ஆதரவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் , விலங்கினங்களை வணங்குவதன் மற்றொரு வடிவம் தான் ஜல்லிக்கட்டு எனவும், இந்த ஜல்லிக்கட்டால் , காளைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படுவது இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாடெங்கும் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது.