Asianet News TamilAsianet News Tamil

வசமாக சிக்கிய பெண் அதிகாரி..உதவியாளரை நியமித்து வசூல் வேட்டை..விசாரணையில் சிக்கிய பணம்..

கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையரின் காரில் இருந்து ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பலமணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Rs 28.35 lakh seized from Coimbatore Zonal Transport Commissioner's car by Vigilance police
Author
Tamilnádu, First Published Apr 23, 2022, 10:05 PM IST

கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையரின் காரில் இருந்து ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பலமணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வரும் உமாசக்தி, அலுவலகத்துக்கு வருபவர்களிடம் லஞ்சம் பெறுவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.இந்நிலையில், இன்று போக்குவரத்து இணை ஆணையர் உமா சக்தியின் காரை மடக்கி பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காரில் மறைவான பகுதியில் வைக்கப்பட்டிருந்த பை எடுத்து, சோதனையிட்ட போது, அதில் ரூ.28.35 லட்சம் இருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீஸார் அவரை, அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்குப்பிடி விசாரனை மேற்கொண்டர். மேலும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். மேலும், இந்த பணம் காரில் எப்படி வந்தது..? யார் கொடுத்தது..? எங்கு கொண்டு சென்றீர்கள் உள்ளிட்ட கோணங்களில் பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரால் எந்தவொரு கேள்விக்கும் பதில் கூற முடியாததால், காரில் இருந்த பணம் லஞ்சமாக வாங்கியது என்பதை உறுதி செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் காரில் இருந்த எடுக்கப்பட்ட 28.35 லட்சம் தொகையை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளரான செல்வராஜ் என்பவரை பிரத்யேகமாக நியமித்து, அவர் மூலம் பொதுமக்கள், தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து லஞ்சமாக பணத்தை வசூலித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி, ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் செல்வராஜ் ஆகியோரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Follow Us:
Download App:
  • android
  • ios