அறநிலையத்துறை நடவடிக்கை.. கோவில்களின் வாடகை பாக்கி ரூ. 200 கோடி வசூல்.. அமைச்சர் சொன்ன தகவல்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசூல் செய்யப்படும் முறை தொடங்கப்பட்டு இதுவரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மேலும் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகபடியாக இதுவரை 6.26 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 

Rs 200 crore collection of rent arrears of temples under the control of the Hindu Temples Department

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி அன்று கணினி வழியாக  திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி  தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் இணையவழியில் வாடகை செலுத்துபவர்களுக்கு ரசீது செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது.இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அசையாச் சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை/குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டான 1431, 01.07.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு 30.06.2022 அன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுகளில் இந்துசமய நிலையத்துறையின் நடவடிக்கையால் இதுவரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மண்டல வாரியாக இணை ஆணையர் சென்னை -1 ரூ. 30.1 கோடியும், இணை ஆணையர் சென்னை-2 ரூ.23.91 கோடியும், இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி ரூ. 16.31 கோடியும், இணை ஆணையர் காஞ்சிபுரம் ரூ. 13.55 கோடியும், இணை ஆணையர் நாகப்பட்டினம் ரூ.13.23 கோடியும், இணை ஆணையர் மயிலாடுதுறை ரூ.12.33 கோடியும், இணை ஆணையர் தூத்துக்குடி ரூ.10.17 கோடியும், இணை ஆணையர் மதுரை ரூ. 10.1 கோடியும், இணை ஆணையர் திண்டுக்கல் ரூ. 9.71 கோடியும், இணை ஆணையர் திருநெல்வேலி ரூ.8.28 கோடியும் என மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. வரும் 27 ல் வெளியீடு.. முழு தகவல்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிகபடியாகசென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.6.29 கோடியும், பழநி முருகன் கோவிலில் ரூ.4.42 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை கோவிலில்  ரூ.4.33 கோடியும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ரூ. 3.05 கோடியும், சென்னை பூங்காநகர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.99 கோடியும், திருச்சி பஞ்சவர்ணசுவாமி திருக்கோயிலில் ரூ.2.47 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.42 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.32 கோடியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.2.04 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் திருகோயிலில் ரூ.1.75 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதலின் படி இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளால் வாடகை/குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூலிக்கும் திட்டம் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் திருக்கோயில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் கூறினார். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
 

மேலும் படிக்க: சென்னையில் கார் மீது மரம் விழுந்து வங்கி மேலாளர் பலி.. மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளம் தான் காரணமா..?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios