குன்னூர்,

குன்னூர் நகருக்குள் சுதந்திரமாக சுற்றித்திரியும் காட்டெருமையைக் கண்டு மக்கள் அஞ்சி ஓடுகின்றனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் இருந்த காட்டெருமைகள் பூங்காவுக்குள் புகுந்தன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பூங்காவில் காட்டெருமை தாக்கியதில் சென்னையைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து பூங்காவுக்குள் காட்டெருமைகள் நுழையாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிம்ஸ் பூங்கா அருகே சாலைகளில் கடந்த சில நாள்களாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

திங்கள்கிழமை மாலை குன்னூர் பெட்போர்டு – சிம்ஸ் பூங்கா இடையே சாலையில் காட்டெருமை ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை காட்டுப்பகுதிக்குள் விரட்டனர்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை அதிகாலை அதே காட்டெருமை குன்னூர் அருகே பெட்போர்டு டானிக் பிரிட்ஜில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் நுழைந்தது. இதைகண்ட அந்த பகுதி மக்கள் காட்டெருமை வெளியே செல்லாமல் இருக்க பள்ளியின் நுழைவு வாயிலைப் பூட்டினர். அதன் பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

குன்னூர் வனத்துறையினர் 10 பேர் கொண்டு குழுவினர் அங்கு வந்து காட்டெருமை பள்ளியின் வாயிலைத் திறந்து காட்டெருமையை விரட்டி அடித்தனர். அப்போது காட்டெருமை அருகில் உள்ள புதருக்குள் சென்றுவிட்டது. காட்டெருமை எப்போது வேண்டுமானாலும் வெளியே வராலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குன்னூர் நகருக்குள் காட்டெருமை சுற்றித் திரிவதால் பொதுமக்கள், பள்ளி மாணவ – மாணவிகள், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.