சென்னையில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பள்ளி, பெசன்ட் நகர் அஷ்டலஷ்மி கார்டன் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பள்ளி, பெசன்ட் நகர் அஷ்டலஷ்மி கார்டன் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னை மாநகராட்சியில் 43.59 சதவீதமே ஓட்டுகள் பதிவானது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பள்ளிகள் அனைத்து வழக்கம்போல் செயல்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பள்ளி, பெசன்ட் நகர் அஷ்டலஷ்மி கார்டன் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.