மதிமுகவில் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

மதிமுக துணைப் பொதுச்செய​லாளர் மல்லை சத்யா​வுக்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் மோதல் எற்பட்டது. இதனையடுத்து தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் முதன்மை செயலாளர் என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை. எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் துரை வைகோவின் ராஜினாமா முடிவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையும் படிங்க: மதிமுக முதன்மைச் செயலாளர் யார்.? திடீர் டுவிஸ்ட் கொடுத்த வைகோ

மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள்

இந்த பரபரப்பான சூழலில் மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம், ஜாட் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துரை வைகோவுக்கு மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு

இதனையடுத்து மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவாக பேசினர். மேலும் துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என தெரிவித்ததாக தகவல் வெளியானது. 

ராஜினாமா செய்யத் தயார்

இந்த கூட்டத்தில் துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என முதன் முதலில் விரும்பியது நான்தான். மதிமுக நலனுக்கு எதிராக எந்த இடத்திலும் செயல்படவில்லை. மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யத் தயார். வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியை விட்டு நீக்கி விடுங்கள். நான் கடைசி வரை வைகோ தொண்டனாக இருந்து விட்டு போகிறேன் என்று மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மல்லை சத்யா பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.