தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய்……ஒபிஎஸ் வலியுறுத்தல்…..

புயல் நிவாரணமாக தமிழகத்திற்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்று முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான வர்தா புயல் நேற்று சென்னை அருகே கரையை கடந்தது. அப்போது புயல் காற்றுடன் பெய்த கனமழையால் சென்னை மாநகரம் உருக்குலைந்துபோனது. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததோடு, வீடுகளின் கூரைகள் பறந்தன.
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. புயல், மழைக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் வர்தா புயல் பாதித்த பகுதிகளில் உடனடி நிவாரண பணிகளுக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது,