relatives rejected the government fund in somanur accident death

சோமனூர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டார். ஆனால் நிவாரணத்தொகையை ஏற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். 

கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய கட்டடம் ஒன்று இருந்தது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்தபோது, பேருந்து நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இதில், 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைதொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டார். 

மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கினார். 

இந்நிலையில், இறந்தவர்களின் உறவினர்கள் நிவாரணத்தொகையை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.