முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்...! நினைவிடத்தில் உறவினர்கள் அஞ்சலி
மக்களின் குடியரசு தலைவர் என அழைக்கப்படும் ஏபிஜே அப்துல்கலாமின் 7வது நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள நினைவிடத்தில் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது கல்வியாலும் விடா முயற்சியாலும் நாட்டின் அக்னி நாயகனாக உருவெடுத்தவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம், ஏவுகணை நாயகன் என அழைக்கப்படும் இவர் 1998ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத பரிசோதனையில் முக்கிய பங்காற்றினார். இதனையடுத்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் பிரதமரின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட அப்துல்கலாமுக்கு நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனையடுத்து தனது பணி ஓய்வுக்காலத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தான் தனது கடமை எனக்கூறி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். இதனையடுத்து நாட்டிற்காக அறிவியல் துறையில் அப்துல்கலாம் ஆற்றிய பணியை அங்கிகரிக்கும் வகையில் பாஜக, காங்கிரஸ் கட்சி ஆதரவோடு நாட்டின் முதல் குடிமகனாக அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. பிரதமர் மோடி வருகை.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..
குடியரசு தலைவராக அப்துல்கலாம் பணியாற்றி காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள், அறிவுரை கூறும் ஜனாதிபதியாக திகழ்ந்தார். குடிரசு தலைவர் மாளிகையில் மாணவர்களுக்கான சிறப்பு அனுமதியும் வழங்கி இருந்தார். நாட்டில் உள்ள பல்வேறு பள்ளி கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனையடுத்த குடியரசு தலைவராக தனது 5 ஆண்டுகள் பணியை முடித்த அப்துல் கலாம் மகிழ்ச்சியாக பணி ஓய்வு பெற்றார். குடியரசு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும் மாணவர்களுடனான் தனது கலந்துரையாடலை நிறுத்தவில்லை.
சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து பதிவிட்டால் கைது.. சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.!
மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அப்துல் கலாமின் மரணம் நாட்டு மக்களை அதிர்ச்சி அடையவைத்தது. ஒவ்வொருத்தரும் தங்கள் வீட்டில் இறப்பு ஏற்பட்டது போல் வேதனையில் வாடினர். இதனையடுத்து அரசு மரியாதையோடு அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் அப்துல்கலாம் நினைவைப்போற்றும் வகையில் மத்திய அரசு சார்பாக அப்துல் கலாம் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவரங்கத்தில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதனையடுத்து இன்று பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது உறவினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இஸ்லாமிய முறைப்படி பாத்திகா ஓதப்பட்டது.
சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி.. இரண்டு நாட்கள் பலூன்கள் பறக்க விட தடை..