வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. பிரதமர் மோடி வருகை.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..
சென்னை மாமல்லப்புரத்தில் நடக்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்க வைப்பதற்காக நாளை பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி, சென்னையில் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”பிரதமர் மோடி வருகையையொட்டி வியாழக்கிழமை நண்பகல் முதல் அன்றிரவு 9 மணி வரை பெரியமேடு,வேப்பேரி,சென்ட்ரல்,அண்ணா சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதேபோல, ராஜா முத்தையா சாலை, ஈவெரா பெரியார் சாலை, சென்ட்ரல், அண்ணாசாலையில் ஸ்பென்சர் சந்திப்பு வரையிலும், மற்றும் இந்தப் பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க:ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
தேவை ஏற்பட்டால் டிஎம்எஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது.போக்குவரத்து மாற்றம்: அதேபோல ஈவெகி சம்பத் சாலை - ஜெர்மையா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. வணிக வாகனங்கள் தவிர்த்து பிற வாகனங்கள் ஈவெரா பெரியார் சாலை, கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சாலை சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும் படிக்க:குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? வெளியான முக்கிய தகவல்!!
பிராட்வேயிலிருந்து வரும் வணிக வாகனங்கள் தவிர்த்து பிற வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள், மேற்கண்ட சாலைகளை தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும். அதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள், அவர்களதுப் பயணத்திட்டத்தை முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை... கரணம் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி!!