குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? வெளியான முக்கிய தகவல்!!
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிபெண்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிபெண்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் 18.50 லட்சம் பேர் தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.
இதையும் படிங்க: MS Office தெரிந்தால் போதும்.. உங்களுக்கு காத்திருக்கிறது தமிழக அரசு வேலை..!
இந்த நிலையில் இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எந்ததெந்த பிரிவினருக்கு எவ்வளவு என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 160க்கு மேலும், BC பிரிவினருக்கு 157க்கு மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 148க்கு மேலும், SCA பிரிவினருக்கு 145க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம்.
இதையும் படிங்க: இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா.. இலங்கை தமிழர் நிவாரணத்திற்கு ரூ.10,000 வழங்கிய பூல்பாண்டியன்..!
இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், பெண்களுக்கு 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.