relatives opposing autopsy to childrens body
வடபழனி தீ விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் 4 பேரும் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேராக பிணவறை நோக்கிச் சென்றவர்கள், சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கிடையே அங்குவந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் செய்தியாளரகளை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சிறுவர்கள் இருவரும் மூச்சுத் திணறலால் உயிரிழந்தது தெரியவந்ததால் பிரதே பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
