தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

நீர்வரத்து மற்றும் மழையின் அளவை பொருத்து அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுவது குறித்து செயற்பொறியாளர்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும், 15 பெரிய ஏரிகள் நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது ஆங்காங்கு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

இந்நிலையில் மேலும் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்... குறிப்பாக வரும் 7 ஆம் தேதி 25 செமீ கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என  எதிர்பார்க்கப்படுவதால், அன்றைய தினத்தில் அணைகள் உடைந்தாலோ அல்லது அதிக தண்ணீர் நிரம்பினாலோ பாதுகாப்பை கருதி 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்து உள்ளது.