தமிழகத்தின் 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமம் வரதராஜ கோவில் இருந்த அனுமன் சிலை காணாமல் போனது.இது குறித்து செந்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரான ராஜராமன் காணாமல் போன அனுமன் சிலை புகைப்படம் www. Christy.com என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்ததை கண்டறிந்தார்.தொடர்ந்து அதிலிருந்து அனுமன் சிலை புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்து, அதைக் காணாமல் போன சிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க இந்திய தொல்லியல் துறை மற்றும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கபப்ட்டது.
இதனிடையே தொல்லியல் ஆய்வாளர்கள் பரிசோதித்து, காணாமல் போன அனுமன் சிலையும் இணையதளத்தில் உள்ள சிலையும் ஒன்று தான் என்பது கண்டறிந்தனர்.எனவே இதுக்குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார்,காணாமல் போன இந்த அனுமன் சிலை 37,500 டாலருக்கு விற்பனை செய்ததும் ஆஸ்திரேலியா நாட்டில் ஒருவருக்கு ஏலம் விடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆஸ்திரேலியாவில் உள்ள சிலையை மீட்க அங்குள்ள காவல்துறை உதவியை தமிழ்நாடு அரசின் சிலை கடத்தல் பிரிவு நாடியது.
மேலும் உள்நாட்டு பாதுகாப்பு உதவியுடன் சிலையை திருப்பி அனுப்ப பரஸ்பர சட்ட உதவியைத் தொடங்கியது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில்,ஆஸ்திரேலிய பொறுப்பாளர் திருடப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான தமிழக அனுமன் சிலையை இந்திய உயர் ஆணையர் மன்பீரித் வொஹ்ராவிடம் ஒப்படைத்தார்.
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, இந்திய சட்ட அமலாக்கப் பிரிசு, உள்நாட்டு பாதுகாப்புத் துறை இணைந்து திருடபப்ட்ட சிலையை மீட்கத் இணைந்து செயல்பட்டனர்.அரியலூரில் காணாமல் போன அனுமன் சிலை, நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டியின் ஏல மையத்தில் விற்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் அச்சிலையை விலைக்கு வாங்கிய நபரிடமிருந்து இறுதியாக மீட்கப்பட்டது.
மேலும் இந்த சிலை இந்தியாவுக்கு வர ஒரு மாத காலம் ஆகலாம் என கூறப்படுகிறது.ஐம்பொன் சிலை மாதிரியைப் பெற்ற பிறகு அச்சிலை அலுவலர்களால் உரிய கோயிலுக்கு ஒப்படைக்கப்படும் எனத் தமிழ்நாடு சிலை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.விரைவில் இச்சிலை வேலூர் கிராமம் வரதராஜ கோவிலில் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது .
