முருக பக்தர்கள் மாநாட்டில் அறிஞர் அண்ணா மற்றும் பெரியாரை விமர்சிக்கும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம். அழைப்பின் பேரில் பங்கேற்றதாகவும், வீடியோவில் அவதூறு இருப்பது தெரியாது என்றும் கூறியுள்ளார்.

RB Udayakumar condemns video criticizing Anna : மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட கழக மூத்த தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் பெரியாரை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ ஒளிபரப்பிய போது மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்றது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை திமுக கடுமையாக விமர்சித்திருந்தது. 'அண்ணா' பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார். செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர். அண்ணாவைக் கேவலப்படுத்துவதை 'அண்ணா' என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள் என கூறியிருந்தது.

‘’அண்ணாவை விமர்சித்த வீடியோ ரசித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்''

மேலும் நாட்டாமை' திரைப்படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை போல முருகன் மாநாட்டில் எந்த ரியாக் ஷனும் காட்டாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் மிக்சர் சாப்பிட வா போனீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மதுரையில் நடைபெற்ற மருக பக்தர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள். முருக பக்தர்களாக கலந்து கொண்டோம். நீதிமன்ற உத்தரவின் படி அரசியல் இல்லாத முருக பக்தர்கள் மாநாடு என்ற காரணத்தால் முருக பக்தர்கள் பங்கேற்கிறார்கள். அதே போலவே அந்த அழைப்பை ஏற்று பங்கேற்றோம். அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையில் மாநாட்டில் கலந்து கொண்டோம்.

முருகர் மாநாட்டில் நடந்தது என்ன.? ஆர் பி உதயகுமார் விளக்கம்

அப்போது ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பேரறிஞர் அண்ணா, பெரியார் குறித்த அவதூறு பரபரப்பப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதிமுக மீதும் விமர்சனங்கள் எழுந்தது. அதிமுக ஒரு நாளும் கொள்கை, லட்சியம் கோட்பாடுகள் விட்டுக்கொடுக்காது. இது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அதிமுக மீது ஏதாவது கிடைக்காத என்ற காரணதால் தற்போது முருகர் பக்தர் மாநாட்டில் நடைபெற்ற சம்பவத்தை அதிமுக மீது விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே அறிஞர் அண்ணா- புரட்சி தலைவி அம்மா பற்றி தவறாக பேசியதால் கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுத்தார்கள் என அனைவருக்கும் தெரியும்.

அவதூறு வீடியோவிற்கு கண்டனம்

இந்த நிலையில் மாநாட்டில் தீர்மானங்கள், உறுதி மொழிக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாநாட்டில் எந்த நடுமுறையை கையாலப்போகிறார்கள் என நமக்கு தெரியாது. அவதூறு வீடியோ ஒளிபரப்ப போவதே தெரியாது. மேடைக்கு முன்பு ஒளிபரப்பப்பட்டது முழு வீடியோ பார்க்க வாய்ப்பு இல்லை. இருந்த போதும் எங்கே எந்த இடத்தில் அண்ணா பெரியாருக்கு அவதூறு வந்தாலும் தட்டிக்கேட்பதற்கு எதிர்து நிற்போம். ஆகவே அண்ணா மற்றும் பெரியாரை அவதூறு செய்து ஒளிபரப்பிய வீடியோவிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். அழைப்பின் அடிப்படையில் முருக பக்தர்கள் என்ற முறையில் சென்றோம். மேடை நாகரிகத்தை கருதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுத்தந்துள்ளார்கள் அந்த வகையில் கலந்து கொண்டதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.