தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலை..! அவசர சட்டம் இயற்ற வேண்டும்..! ராமதாஸ் கோரிக்கை
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் வகையில் சட்டத்தை இயற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வட மாநிலத்தவளுக்கு வேலை
தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் அதிகமான அளவு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியில் கலந்து கொள்ளும் நிலை உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு வேறு மாநிலத்தவர்களுக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து தமிழக அரசிடம் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் புலமை பெறாத வெளிமாநிலத்தவர் இனி தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவது தடுக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது! என கூறியுள்ளார்.
மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் 1,500 ஊக்கத்தொகை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்.
தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடந்த போது, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர் பங்கேற்றனர். தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படாது தான் இதற்கு காரணம் என்று பாமக கூறியிருந்தது. அந்தத் தவறு இப்போது சரி செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி! தமிழக அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர் சேருவதை தடுக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும்! தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் 80% பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தனியார் வேலைகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்ற வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்