Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் 1,500 ஊக்கத்தொகை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்.

பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்படும் இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 
 

You can apply for the Tamil Literary Aptitude Test from tomorrow
Author
Tamil Nadu, First Published Aug 21, 2022, 11:40 AM IST

2022 - 23 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனை பள்ளி மாணவர்களிடம் மேம்படுத்திக்கொள்ளும் வகையில், தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேர்வெழுதும் மாணவர்களில் 1500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். 

மேலும் படிக்க:நானும் உதயநிதியும் அண்ணன் தம்பி தான்.. ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்ய தகவல். .

இத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 50 % பேரும், மீதமுள்ள 50 % - ல் அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். 

மேலும் படிக்க:ரோம் நகர மன்னன் பிடில் வாசித்ததை போல, தமிழகமே சீரழியும் போது ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துகிறார்.! ஜெயக்குமார்

அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வில், தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் ( CBSE / ICSE / உட்பட) 11-ம் வகுப்பு மாணவர்கள் கலந்துக்கொள்ளலாம். இத்தேர்விற்கு விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும்  ‘www.dge.tn.gov.in’ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்றும் அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்விற்கு வரும் இன்று முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios