Asianet News TamilAsianet News Tamil

ஊழல் குற்றச்சாட்டில் பெரியார் பல்கலை. துணை வேந்தர் கைது.! பணி நீக்கம் செய்யாதது ஏன்.? - ராமதாஸ் கேள்வி

மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்கான துணைவேந்தர் போன்ற உயர்பதவிகளில் அப்பழுக்கற்றவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

Ramadoss demands removal of Vice-Chancellor of Periyar University KAK
Author
First Published Jan 2, 2024, 11:58 AM IST | Last Updated Jan 2, 2024, 11:58 AM IST

துணை வேந்தர் கைது

முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்டு, துணை வேந்தர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்தநிலையிலை இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி தமது தலைமையில் தனியார் நிறுவனம் தொடங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பட்டியலினத்தவர் வன்கொடுமை சட்டத்தின்படியும்  கைது செய்யப்பட்டு, இடைக்கால பிணையில் வந்துள்ள அதன் துணைவேந்தர் ஜெகநாதன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.

முந்தைய காலங்களில் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தராக இருந்த இராதாகிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஆகியோர் கைது செய்யப்பட்ட போது, உடனடியாக  அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால்,  பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரத்தில் மட்டும் அவருக்கு தனிச்சலுகை காட்டப்படுவது வியப்பளிக்கிறது.

Ramadoss demands removal of Vice-Chancellor of Periyar University KAK

பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்.?

மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்கான துணைவேந்தர் போன்ற உயர்பதவிகளில் அப்பழுக்கற்றவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தலைமறைவாக உள்ள பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைவேந்தரும், பதிவாளரும் இல்லாத சூழலில் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கவும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மோடியை வரவேற்க யார் யாருக்கு அழைப்பு.? ஓபிஎஸ்க்கு சிறப்பு அழைப்பா.? அண்ணாமலை அதிரடி
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios