வருமான வரித்துறை ரெய்டில் சிக்கி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ராம மோகன ராவிற்கு தொழிற்கு முனைவோர் மேம்பாட்டு இயக்குநராக மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக  இருந்தபோது தலைமை செயலாராக நியமிக்கப்பட்டவர் ராம மோகனராவ், அவருடைய அண்ணா நகர்  வீட்டிலும், தலைமை செயலகத்தில் உள்ள இவருடைய அறையிலும் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில் சுமார் 30 லட்ச ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுக்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் நீக்கப்பட்டார், கிரிஜா வைத்தியநாதன்  புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்

அதே நேரத்தில் தலைமை செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராம மோகனராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். 

இநநிலையில் அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை தொழில் முனைவோர் மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளராக இருந்த ராஜாராம் நில நிர்வாக துறையின் முதன்மை செயல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.