Asianet News TamilAsianet News Tamil

சேகர் ரெட்டியிடமிருந்து மாதம் 1 கோடி ரூபாய் கமிஷன் பெற்றாரா ராம் மோகன் ராவ்? - வருமான வரித்துறை புதுத் தகவல்

ram mohan rao got 1 crore comission from sekar reddy
ram mohan rao got 1 crore comission from sekar reddy
Author
First Published Jun 9, 2017, 9:55 AM IST


மணல் மாஃபியா என்று அழைக்கப்படும் சேகர் ரெட்டியிடமிருந்து, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஒவ்வொரு மாதமும் 1 கோடி ரூபாய் கமிஷன் பெற்றுள்ளதாக வருமாக வரித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் மணல் காண்ட்ராக்டராக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் கடந்த ஆண்டு இறுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் 131 கோடி ரூபாய் பணம் மற்றும் 177 கிலோ தங்கம் பறிமுத்ல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ram mohan rao got 1 crore comission from sekar reddy

அதே நேரத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் மற்றும் அவரது மகன் வீட்டிலும் வருமான வரித் துறையின் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், அவரிடம் அமைச்சர்கள், உயரதிகாரிகள் பலர்  தொடர்பில் இருந்தது தெரியவந்ததது. 

இதைத் தொடர்ந்து டைரியில் குறிப்பட்டுள்ள  அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு வருவாய் புலனாய்வுத் துறையினர் பரிந்துரை செய்திருந்தனர்.

ram mohan rao got 1 crore comission from sekar reddy

இந்நிலையில் சேகர் ரெட்டியின் டைரியில், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவுக்கு மாதம் தோறும் 1 கோடி ரூபாய் கமிஷன் கொடுத்து வந்தது அம்பலமாகியுள்ளது.

தற்போது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குநராக உள்ள ராம் மோகன் ராவ் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறையின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios