சோ அரசியல் ஆலோசனை கூறினால் சரியாகத்தான் இருக்கும் என சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 47வது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

துக்ளக் இதழின் 47வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகா் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், துக்ளக் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

 நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தேசியத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சோவிடம் ஆலோசனை பெற வந்ததாக நடிகர் தொிவித்தாா். சோவின் அரசியல் ஆலோசனையை மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கேட்டதாகவும், அவர் ஆலோசனை சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டு பேசினாா். 

இதனிடையே, வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, சோ ராமசாமியின் பெயரையோ, அவரது அரசியல் கருத்துக்களையோ தவிர்த்துவிட்டு இந்திய அரசியல் வரலாற்றை யாரும் எழுத முடியாது என தெரிவித்தார். 

சோவின் அரசியல் விமர்சனங்கள், நையாண்டி நிறைந்ததாக இருக்கும் என்றும், அது விமர்சனத்துக்கு உள்ளாகக் கூடியவர்களையும் சிரிக்க வைக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

பிரிவினை சக்திகளுக்கு எதிரான ஆயுதமாக துக்ளக் பத்திரிகையை சோ நடத்தினார் என்று குறிப்பிட்ட நரேந்திர மோடி, அவரது இழப்பு தனிப்பட்ட இழப்பாகக் கருதுவதாகக் கூறினார்.