Rajini board executives decided to support Rajinis activities
ரஜினியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என நகர ரஜினி மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகர ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் நகரத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
நகரச் செயலாளர் கே.ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
தேனி மாவட்டத் தலைவர் புஷ்பராஜ், மாவட்டச் செயலாளர் பொன் சிவா, மாவட்டப் பொருளாளர் வேததாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், “ரஜினியின் அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிப்பது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு பெரியகுளம் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
