முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை.. ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் விளக்கம்!
வரலாறு காணாத அளவில் அமைச்சர்கள் விஷயத்தில் ராஜ் பவன் மௌனம் காத்து வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் தமிழக சட்ட அமைச்சர்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நால்வர் மீது, ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதியை வழங்காமல் நீண்ட காலமாக அது நிலுவையில் இருப்பதாகவும், வரலாறு காணாத அளவில் இந்த விஷயத்தில் ராஜ் பவன் மௌனம் சாதித்து வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு திடீர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்..
திரு. வெங்கட் ரமணா மற்றும் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான வழக்கை, CBI விசாரித்து வருவதாகவும், அது சட்ட பரிசோதனைக்கு உட்பட்டு தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். ரமணா மற்றும் சி. விஜயபாஸ்கர் மீது குட்கா மற்றும் மாவா விநியோகிப்பவர்களிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : லாரி மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தை உள்பட 4 பேர் பலி
அதே போல விஜிலென்ஸ் இயக்குனரகம் தொடர்பான கே.சி. வீரமணியின் வழக்கில், மாநில அரசு அளிக்கவேண்டிய விசாரணை அறிக்கையின், முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், அதில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் மாநில அரசிடம் இருந்து இதுவரை திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பாக ராஜ் பவனுக்கு எந்த குறிப்போ அல்லது கோரிக்கையோ வரவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ஒரு பாலி ட்ரிப் போகலாமா?.. அழைப்பு விடுக்கும் IRCTC