ஒரு பாலி ட்ரிப் போகலாமா?.. அழைப்பு விடுக்கும் IRCTC - தேவையான எல்லா தகவலும் உள்ளே!
இந்தியாவின் லக்னோவில் இருந்து இந்தோனேசியாவின் பாலிக்கு சென்று திரும்ப 1 லட்சம் ரூபாயிலிருந்து Package தொடங்குவதாக கூறியுள்ளது.

கையைக் கடிக்காமல் ஒரு அழகிய சுற்றுலா சென்று வர வேண்டும் என்பது தான் பல நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களின் பல ஆண்டு கனவாக இருக்கும். வருடம் முழுக்க சிறுக சிறுக சேர்த்து வைத்து அந்த பணத்தில், சுற்றுலா சென்று வரும் பல இளசுகளை நம்மால் அடிக்கடி பார்க்கமுடிகிறது. அதே போல சுற்றுலாவை எளிதாக்கித்தரும் சுற்றுலா ஏஜென்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
அந்த வகையில் பிரபல IRCTC நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை சற்று குறைந்த தொகைக்கு மக்களுக்கு அளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் தகவலை வெளியிட்டுள்ளது IRCTC நிறுவனம். அதில் இந்தியாவின் லக்னோவில் இருந்து இந்தோனேசியாவின் பாலிக்கு சென்று திரும்ப 1 லட்சம் ரூபாயிலிருந்து Package தொடங்குவதாக கூறியுள்ளது.
இதையும் படியுங்கள் : தேசிய நெடுஞ்சாலைகளில் வன விலங்குகளுக்கு தனி வழித்தடங்கள்
இந்த இன்ப சுற்றுலா 5 இரவுகள் மற்றும் ஆறு பகல்களை கொண்டதாக இருக்கும், மேலும் இந்த சுற்றுலாவில் நீங்கள் தங்கும் அனைத்து ஹோட்டல்களும் 4 ஸ்டார் ஹோட்டல்களாக இருக்கும் என்றும் IRCTC தெரிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் லக்னோவில் இருந்து பாலிக்கு சென்று திரும்பும் விமான டிக்கெட் விளையும் மேலே குறிப்பிட்ட தொகையில் அடங்கும்.
ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இந்த சுற்றுலா துவங்க உள்ளது.
நாள் ஒன்று : இரவு 8 மணிக்கு லக்னோவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டு பாலி சென்றடைவீர்கள்.
நாள் இரண்டு : கேசக் நடன நிகழ்ச்சியுடன் உள்ளுவடு கோயில் முழுவதும் சுற்றுலா அழைத்து செல்வார்கள்.
நாள் மூன்று : உபுட் காபி தோட்டம் சுற்றுலா, அதன் பிறகு ராயல் பேலஸ் சுற்றுலா.
நாள் நான்கு : பாலியில் உள்ள மூன்று முக்கிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படும் (கப்பல் பயணமும் அடங்கும்).
நாள் ஐந்து : பாலியின் Tanjung Benoa பகுதியில் கடல் ஆமைகளை சுற்றிப்பார்க்க படகில் அழைத்து செல்வார்கள்.
நாள் ஆறு : காலை உணவு முடிந்தவுடன் பாலியில் இருந்து புறப்பட்டு லக்னோவிற்கு இரவு 7 மணிக்கு பயணிகள் வந்து சேர்வார்கள்.
பாலி மட்டுமல்லாமல் குறைந்த விலையில் பல நாடுகளுக்கு IRCTC தற்போது சுற்றுலாக்களை அமைத்து தந்து வருகின்றது.
இதையும் படியுங்கள் : ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது -உயர்நீதிமன்றம் அதிரடி!