தேசிய நெடுஞ்சாலைகளில் வன விலங்குகளுக்கு தனி வழித்தடங்கள்; பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை!!
தேசிய நெடுஞ்சாலைகளில் வன விலங்குகளுக்கு என்று தனி வழித்தடங்கள்; பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை!!

சத்தீஸ்கர் மாநிலத்திற்கு நாளை செல்லும் பிரதமர் மோடி 6-லைன் கிரீன்ஃபீல்ட் ராய்ப்பூர் - விசாகப்பட்டினம் வழித்தடத்தின் சத்தீஸ்கர் பகுதிக்கான மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாக 2.8 கிமீ நீளம் கொண்ட 6-வழிச் சுரங்கப்பாதை, விலங்குகளுக்கான 27 வழித்தடங்கள், குரங்குக்ளுக்கான 17 தொங்கு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலையில் வன விலங்குகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கான இந்த வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. உத்தண்டி வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து வெளியேறும் விலங்குகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று இந்த வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
நெடுஞ்சாலை மேம்பாட்டால் வனவிலங்குகல் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்பதால் தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி இந்த திட்டங்கள் முன்னெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகள்/விரைவுச் சாலைகளின் மேம்பாட்டுடன், வனவிலங்குகள் பாதுகாப்பாக செல்லவும், அவற்றின் வசிப்பிடத்திற்காகவும் இத்தகைய உள்கட்டமைப்பைகள் நெடுஞ்சாலை மேம்பாட்டில் இடம்பெறும் அம்சமாக உள்ளது.
உதாரணமாக, 2021 டிசம்பரில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடமானது, தடையற்ற வனவிலங்குகள் நடமாட்டத்திற்காக ஆசியாவின் மிகப்பெரிய வனவிலங்கு தாழ்வாரமாக அமையும். இந்த தாழ்வாரம் சுமார் 12 கிமீ தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. அத்தகைய திட்டங்களின் விரிவான பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.