Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லுபடியாகாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

op Ravindranath election victory has been ordered by Madras High Court to be invalid
Author
First Published Jul 6, 2023, 3:04 PM IST

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அதிமுக சார்பில் புதுவை உட்பட தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் தேனி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் ரவீந்திரநாத் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். தனது வழக்கில், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு ரவீந்திரநாத் பணம் கொடுத்துள்ளார். ஆவணங்கள் பொய்யாக வழங்கப்பட்டுள்ளன. எனவே,  ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டுமென மிலானி கேட்டுக் கொண்டு இருந்தார்.

திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு; காவலருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், வாக்காளர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிபதி சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

குடகும், இடுக்கியும் தமிழ்நாட்டுடன் இருந்திருந்தால் செல்வம் கொழித்து இருக்கும் - சீமான் பேச்சு

இதனைத் தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மேல்முறையீட்டுக்கு ஏதுவாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்,

Follow Us:
Download App:
  • android
  • ios