வெப்பச்சலனம் காராணமாக தமிழகம்,புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்,சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

மாலைத்தீவு, குமரிக்கடல், கச்சதீவு  பகுதியில்  மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளத்தால்,அதிவேக  காற்று வீசப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை  காற்றின் வேகம் இருக்கும் என்பதால், இன்று மற்றும்  நாளை இரு நாட்களுக்கு  மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும்,கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று  ஒன்றாக சேருமிடத்தில், இடியுடன்  கூடிய மழைக்கான  வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவிக்கப் பட்டு உள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில்  மட்டும்  கோத்தகிரியில் 10 செமீ  மழை பதிவாகி உள்ளது..அதே  போன்று செங்கோட்டையில்  அதிக மழை பெய்துள்ளது

இதனை தொடர்ந்து அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு வடக்கு மற்றும் தென் தமிழகத்தில் நல்ல மழை இருக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.