இதனடையே நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விசகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தததையடுத்து  கடந்த 17 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது,

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையிலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் இன்று அதிகாலை கனமழை கொட்டியது.தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாதவரம், போரூர், பம்மல், நுங்கம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக கோவை மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ராசாமணி அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்றுவிடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமயில் பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதே புதுச்சேரி மாநிலத்திலும் பரவலாக கனமழை பெய்தது. இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உரவாக உள்ளதாகவும் இதனால்  தமிழகம் முழுவதும் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது