rain contonue in chennai. thiruvallur. kanjeepuram disticts
சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களிலும்,, திருவள்ளூர் மாவட்டத்தல் விடிய, விடியவும் கன மழை கொட்டி வருகிறது. இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெம்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்ததில் நகர்ன் பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.
அதே நேரத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மழை சற்று ஓய்திருந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் மழை கொட்டித்தீர்த்தது.

நேற்று பகல் பொழுதில் குளிர் காற்று, சாரல் மழை என இதமான சூழல் நிலவி வந்ததது. இரவில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது.
அசோக்நர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, புழல் செங்குன்றம், மாதவரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் விடியவிடிய மழை பெய்து வருகிறது.
மேலும் தொடர் மழை காரணமாக பொன்னேரி அரசு கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த தேர்வுகள் வேறு ஒரு நாளில் நடத்தப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், படப்பை, சுங்குவார்சத்திரம், ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் இந்த மூன்று மாவட்டங்களிலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
