தமிழகம், மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு, வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுவடைந்து உள்ளது என்றும், இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


   
மேலும் ஆழ்கடல் மீனவர்கள் நாளை மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் காரணமாக, வரும்15 ஆம் தேதி கன மழையும், வரும் 16 ஆம் தேதி அதிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆந்திர பிரதேச தெற்கு பகுதியிலும், வட தமிழகம் பகுதியை  நோக்கியும் நகர்ந்து வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, வரும் 15 ஆம் தேதி 55 முதல் 65 கிமீ வேகத்தில் மழை காற்று வீடும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் கடல் அலை 3 மீ - க்கும் மேல் எழும் என்றும், இந்த மூன்று  நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க  செல்ல வேண்டாம் என ன எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மழை நிலவரம் 

வரும் 15 ஆம் தேதியன்று, 64.5 முதல் 115.5 mm/day மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர தமிழகத்தின் சில குறிப்பிட்ட இடங்களில் கனத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே கஜா புயலின் கோர சம்பவத்தில் இருந்து மீண்டு வர முடியாத நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்ற அறிக்கை மக்களுக்கு ஒருவிதமான பயத்தை உண்டு செய்கிறது.