Asianet News TamilAsianet News Tamil

ஏன், எதற்கு என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சியின் அடிப்படை… முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து!!

ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

questioning why is the basis of human development  says cm stalin
Author
First Published Nov 28, 2022, 5:09 PM IST

ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு வானவில் மன்றத்தை தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏன்..? இலவச மின்சாரம் ரத்து செய்ய திட்டமா.? செந்தில் பாலாஜி விளக்கம்

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை! பகுத்தறிவைப் பள்ளிப்பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் வானவில் மன்றம்; அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு! கற்றல் இனிமையாகட்டும்! கல்வி முழுமையாகட்டும்! என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..! ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல - டிடிவி தினகரன்

பள்ளிக்கல்வித் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதத்தை உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வானவில் மன்றத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios