ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..! ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல - டிடிவி தினகரன்

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக  அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியாகும் வரை கொண்டு செல்வது ஆளுநர் மரபிற்க்கு எதிரானது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 

TTV Dhinakaran said delaying the online gambling ban bill is unbecoming of the governor

ஆளுநர் மரபிற்கு எதிரானது

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வளர்ச்சி பணிகள் குறித்த கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். இதையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக  அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியாகும் காலம் வரை கொண்டு செல்வது ஆளுநர் மரபிற்க்கு எதிரானது என கூறினார். 

நீட் தேர்வு மசோதா.! விளக்கம் கேட்ட மத்திய அரசு.!தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா..? மா.சுப்பிரமணியன் பதில்

TTV Dhinakaran said delaying the online gambling ban bill is unbecoming of the governor

ஆணவத்தில் பேசும் அதிமுகவினர்

எந்த அரசு சட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்பதே ஆளுநர் பதவிக்கு அழகு என தெரிவித்தார்.  இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைப்பெறாமல் விமர்சனங்கள் இல்லாமல் ஆளுநர் பார்த்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசியல் இருப்பவர்களின் தலையெழுத்து மக்கள் கையில் உள்ளது ஆணவத்தின் வெளிபாடாக அதிமுகவினர் பேசி வருகின்றனர், அவர்களுக்கு மக்கள் நல்ல முடிவை தருவார்கள் என கூறினார். தேர்தல் நோக்கிய செயல்பாடுகளிலும்,கட்சி வளர்ச்சி செயல்பாடுகளிலும் அமமுக முன்னோக்கி செயல்படுகிறது என தெரிவித்தார். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் தர வேண்டும் என்று கூறிய அவர் டிசம்பர் 31க்குள்  100% முடியவில்லை என்றால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

கோவை கார் குண்டு வெடிப்பு..! டுவிட்டரில் சர்ச்சை பதிவு.! கிஷோர் கே சாமிக்கு போலீஸ் காவல்..? நீதிமன்றம் உத்தரவு
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios