கோவை கார் குண்டு வெடிப்பு..! டுவிட்டரில் சர்ச்சை பதிவு.! கிஷோர் கே சாமிக்கு போலீஸ் காவல்..? நீதிமன்றம் உத்தரவு
கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் இஸ்லாமிய ஜமாத் அமைப்பை விமர்சிக்கும் வகையில் சர்ச்சை கருத்து வெளியிட்ட பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கார் குண்டு வெடிப்பு- சர்ச்சை பதிவு
கோவை உக்கடம் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான ஜமேஷா முபின் உயிர் இழந்தார். இதனையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஜமேஷா முபின் மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முஸ்லிம் ஜமாத்துகள் முன்வரவில்லை. அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய முயன்ற நபரை அடைக்க செய்ய முதலில் மறுப்பு தெரிவித்தனர். இந்த செய்தி சமூக வலைதளத்தில் பரவியது. இந்த பதிவை சுட்டிக்காட்டிய பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சாமி, குண்டு ஒழுங்காக வைக்க தெரியாத நபரை ஜமாத்துக்கள் எப்படி அடக்கம் செய்வார்கள் என்ற பொருளில் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
கிஷோர் கே சாமி நீதிமன்றத்தில் ஆஜர்
இதனால் இந்து- முஸ்லீம் இடையே பிரச்சனை ஏற்பட வாய்பிருப்பதாக கூறி, கோவை சைபர் கிரைம் போலீஸார் கிஷோர் கே சாமி மீது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 இன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமி, கோவை குண்டு வெடிப்பு தொடர்பான சர்ச்சை பதிவு வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
கிஷோர் கே சாமிக்கு போலீஸ் காவல்
இதனையடுத்து கிஷோர் கே சாமியை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நான்கில் நீதிபதி சரவண பிரபு முன்பாக சைபர் குற்றப் பிரிவு போலீசார் ஆஜர் படுத்தி இரண்டு நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி இரண்டு மணி நேரம் ஒதுக்கி உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்கள்