புரட்டாசி மாதப்பிறப்பு.. 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு பாதையாத்திரை
ஆற்காடு திருமங்கை ஆழ்வார் குழுவினரின் திருப்பதி பாதயாத்திரை நிகழ்வில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய நடைபாதையை தொடங்கினர்.

ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் புரட்டாசி மாதமும் ஒன்று. புராட்டாசி என்றாலே பெருமாள் தான் நம் நினைவுக்கு வரும். பெருமாளுக்கு உகந்த மாதங்களில் ஒன்றான புரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது என்பது ஐதீகம். எனவே புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில், புரட்டாசி மாதத்தை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு திருமங்கை ஆழ்வார் திருப்பதி திருமலை பிரம்மோற்சவ குழுவினர்களின் 36-ஆம் ஆண்டு நடை பாதயாத்திரை நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக நேற்று இரவு ஆற்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நடைபாதையாக புறப்பட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் சோளிங்கர் கொடைக்கல் பகுதியில் த்ரௌபதி அம்மன் கோவிலில் திருமங்கை ஆழ்வார் குழுவின் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. அதனை முன்னிட்டு மாலை அணிவித்து கொண்ட பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என அனைத்து பக்தர்களும் முக்கிய சாலையின் வழியாக கோவிந்தா..கோவிந்தா.. கோவிந்தா..என பக்தி கோஷங்களை எழுப்பி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
இதனிடையே தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் மலை மேல் பழமைவாய்ந்த சிவன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தத் திருக்கோயிலில் சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது முன்னதாக புனித கலச குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு நெய் வஸ்திரம் உள்ளிட்டவற்றை கொண்டு பூர்ணஹூதி சமர்ப்பிக்கப்பட்டு யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது
கோயிலில் எழுந்தருளிருக்கும் அரசமரத்தை சிவனாகவும் வேப்பமரத்தை பார்வதி ஆகவும் பாவித்து அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக தொடங்கியது. சிவன் பார்வதிக்கு தீபாராதனை காட்டப்பட்ட பின் திருக்கல்யாண சேவை சிறப்பாக நடைபெற்றது பின்னர் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது
அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மூலவர் சிவலிங்கத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவன் பார்வதிக்கு நடைபெற்ற திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர். பின்னர் பெண்கள் தங்கள் மாங்கல் பாக்கியம் நலம் பெற வேண்டி வேப்ப மரத்திற்கு மாங்கல்யத்தை கட்டி வழிபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்து சென்றனர்