Asianet News TamilAsianet News Tamil

பந்தாடப்பட்ட பழவேற்காடு….மீனவ பகுதி ……30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் துடிப்பு….

pulighat
Author
First Published Dec 13, 2016, 9:11 AM IST


பந்தாடப்பட்ட பழவேற்காடு….மீனவ பகுதி ……30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் துடிப்பு….

சென்னையைப் பதம் பார்த்த வர்தா புயல் திருவள்ளுவர் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை இந்த கடும் புயலால்  பழவேற்காடு பகுதி  பலத்த சேதம் அடைந்துள்ளது,.வர்தா புயல் நேற்று மதியம் 12 மணி முதல் நகரத்தொடங்கி  மாலை 3.30 மணியளவில் புயலின் மையப்பகுதி பழவேற்காடு அருகே கரையை கடந்தது.

இந்த புயல் காரணமாக மிக பலத்த மழை பெய்ததோடு கடும்  சூறாவளி காற்றும் வீசியது. . இதனால்  30 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பழவேற்காடு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், திருத்தணி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், சோழவரம், எண்ணூர், திருவேலங்காடு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும்  பலத்த  மழை பெய்தது. அங்கிருந்த  நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்தன.

பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த  நெல், வாழை, தென்னை போன்ற பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.

மீனவ கிராமமான பழவேற்காட்டில் உள்ள ஏரியும், கடலும் இணையும் முகத்துவார பகுதியில்  தண்ணீர் சுழற்சி வழக்கத்திற்கு மாறாக மாறியது. கடல் நீர் வெள்ளமாக வெளியேறி இங்குள்ள 30 கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் பலரும் வெள்ளத்தில் சிக்கினர்.  அவர்களை மீட்கும் பணிகளில்  தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios