புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தற்போது பெங்களூர் மற்றும் ஐதாராபாத்திற்கு  ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்து வருகிறது.

இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் சென்னை மற்றும் சேலத்திற்கு ஏர் ஒடிஷா நிறுவனம் புதிய விமான சேவையை தொடங்க உள்ளது. பயணத்திற்கான முன்பதிவையும் தற்போது தொடங்கியுள்ளது அந்நிறுவனம்.

அதன்படி, சென்னையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.55 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மீண்டும் மதியம் 1.15 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்படும் விமானம் மதியம் 2 மணிக்கு சென்னையை சென்றடையும்.

அதேபோல், காலை 9.10  மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் காலை 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும் மதியம் 12.15 மணிக்கு சேலத்திலிருந்து புறப்படும் விமானம் மதியம் 1 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.

இந்த பயணத்துக்கான கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி

1. சென்னை - புதுச்சேரி ரூ.1,940.

2. புதுச்சேரி - சென்னை ரூ. 1,470.

3. புதுச்சேரி - சேலம் ரூ. 1,550.

4. சேலம் - புதுச்சேரி ரூ. 1,550.