Asianet News TamilAsianet News Tamil

வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு - போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்...

public sector bank do not transfer to private bank workers Cerebellar prote
public sector-bank-do-not-transfer-to-private-bank-work
Author
First Published May 5, 2017, 6:39 PM IST


சென்னையில், வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதல் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலான கிராம மக்களுக்கு வங்கிகள் மூலம் தான் கடன் உதவி பெற்று வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கிகளை இணைப்பதை நிறுத்தி விட்டு, புதிய கிளைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில், பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் எதிரே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதல் கூடாது எனவும், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் மட்டுமே கடனுதவி வழங்குவதாகவும், தனியார் வங்கிகள் வழங்குவதில்லை எனவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதல் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios