ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக்க ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்துள்ளது. இதனால், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டி நடத்த முடியாமல், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதைதொடர்ந்து உச்சநீதிமன்ற தடை உத்தரைவை மீறி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

அலங்கா நல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றனர். ஆனால், போலீசார் அதை தடுத்து நிறுத்தியதுடன், அங்கிருந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, சிலரை கைது செய்தனர். இதனை கண்டித்து, நேற்று இரவு முதல் தற்போது வரை விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி, சென்னை காமராஜர் சாலையில், நூற்றுக்கணக்கான வாலிபர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், “பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும. ஜல்லிக்கட்டு நடத்தி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர்.

முதமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செல்லும், காமராஜர் சாலையில், திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.