அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு தொடர்பாக 17 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து முன்னாள் தேர்வுத்துறை அதிகாரியான பேராசிரியை உமாவை அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளனர்.

2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் விடைத்தாள் மறுத்திருத்தம், மறுகூட்டலில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருக்கிறது. இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது மாணவர்களிடம் லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.

ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். இதில் 189 கோடி ரூபாய் மேல்  முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி வி உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்து இருக்கிறது. இவருக்கு கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள்.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய 10 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தநிலையில் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  

இதனையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் தேர்வுக்  கட்டுப்பாட்டாளரான பேராசிரியை ஜி வி உமா  வீட்டில், மற்றும் பல்கலை கழக அலுவலகங்களில் சொதனடத்தினர், இதில் பல்வேறு ஆவணக்ல்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் பேராசிரியை உமாவை அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளது அண்ணா பல்கலைக் கழகம்.