Asianet News TamilAsianet News Tamil

செல்லாத நோட்டு பிரச்சனையால் பால் உற்​பத்​தி​யா​ளர்​களுக்கு பணம் வழங்குவதில் சிக்கல்…

problem for-giving-money-to-milk-productive-workers-due
Author
First Published Dec 5, 2016, 11:01 AM IST


செல்லாத நோட்டு பிரச்சனையால், பால் உற்​பத்​தி​யா​ளர்​களுக்கு பணம் வழங்​கு​வ​தில் சிக்கல் ஏற்பட்டதால், பால் உற்​பத்​தி​யா​ளர்​கள் கூட்​டு​றவு சங்​கத்​தைச் சேர்ந்த 3,028 பால் கறவை​தா​ரர்​க​ளுக்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யபட்டது.

செய்​யா​றில் செயல்​பட்டு வரும் பால் உற்​பத்​தி​யா​ளர்​கள் கூட்​டு​றவு சங்​கம் கடந்த 1949-ஆம் ஆண்டு தொடங்​கப்​பட்​ட​தா​கும்.​ 20 ஆயி​ரம் உறுப்​பி​னர்​க​ளைக் கொண்​டுள்ள இந்த சங்​கத்​தில் 3,028-க்கும் மேற்​பட்ட பால் கற​வை​தா​ரர்​கள் மூலம் நாள்​தோ​றும் சரா​ச​ரி​யாக 14 ஆயி​ரம் லிட்​டர் பால் பெறப்​ப​டு​கி​றது.​ 71 பால் கறவை மையங்​கள் (யாட்)​ மூலம் பெறப்​ப​டும் பாலில் 20 சத​வீத பால் செய்​யாறு நகர் முழு​வ​தும் காலை,​​ மாலை வேளை​க​ளில் விநியோகிக்கப்படு​கி​றது.​ மீத​முள்ள 80 சத​வீத பால் அனக்​கா​வூ​ரில் உள்ள ஆவின் பால் நிலை​யத்​துக்கு வழங்​கப்​ப​டு​கி​றது.​

பால் விநி​யோ​கம் செய்​யும் கற​வை​தா​ரர்​க​ளில் கிரா​மப் பகு​தி​க​ளில் உள்​ள​வர்​க​ளுக்கு வெள்ளிக்​கி​ழ​மை​யும்,​​ நகர்ப் பகு​தி​யில் உள்​ள​வர்​க​ளுக்கு சனிக்​கி​ழ​மை​யும் வாரந்​தோ​றும் சுமார் ரூ.25 இலட்​சம் வரை பணப்​பட்​டு​வாடா செய்​யப்​ப​டு​கி​றது.​

இந்​நி​லை​யில்,​​ மத்​திய அர​சின் ரூ.500,​1000 நோட்​டு​கள் செல்​லாது அறி​விப்பு கார​ண​மாக தேசி​ய ​ம​ய​மாக்​கப்​பட்ட வங்கி மற்​றும் கூட்​டு​றவு வங்கி ஆகி​ய​வற்​றில் கணக்கு வைத்திருக்​கும் செய்​யாறு பால் உற்​பத்​தி​யா​ளர்​கள் கூட்​டு​றவு சங்​கம்,​​ அதன் உறுப்பினர்களுக்கு பணம் பட்​டு​வாடா செய்ய முடி​யா​மல் கடந்த ஒரு மாத கால​மாக சிரமப்​பட்டு வந்​தது.

இந்​த நி​லை​யில்,​​ சென்னை பால் உற்​பத்தி மற்​றும் பால் பண்ணை மேம்​பாட்​டுத் துறை ஆணை​ய​ரின் அறி​வு​றுத்த​லின்​படி,​​ பால் உற்​பத்​தி​யா​ளர்​கள் கூட்​டு​றவு சங்​கங்​க​ளின் உறுப்பினர்​க​ளுக்கு பால் பண​பட்​டு​வாடா எளி​தாக செய்​யும் வகை​யில்,​​ அவர்​க​ளுக்கு வங்கிகள் மூலம் பணப் பரி​வர்த்​தனை செய்ய வலி​யு​றுத்​தப்​பட்​டது.​

மேலும்,​​ பால் உற்​பத்​தி​யா​ளர்​க​ளில் வங்​கிக் கணக்கு இல்​லா​த​வர்​க​ளுக்கு கணக்கு தொடங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.​ ​

அதன்​படி,​​ செய்​யாறு பால் உற்​பத்​தி​யா​ளர்​கள் கூட்​டு​றவு சங்​கக் கட்​ட​டத்​தில் சங்​கத் தலைவர் ஏ.அரு​ண​கிரி தலை​மை​யில்,​​ செய​லர் கிரி​சன் முன்​னி​லை​யில்,​​ பாரத ஸ்டேட் வங்கி செய்​யாறு கிளை மூலம் பாரத பிர​த​ம​ரின் ஜன்​தன் யோஜனா திட்​டத்​தின்​கீழ்,​​ சங்க உறுப்​பி​னர்​க​ளுக்கு வங்​கிக் கணக்கு தொடக்​கும் நிகழ்ச்சி சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ முதல் நாளில் சுமார் 150 பால் கற​வை​தா​ரர்​க​ளுக்கு வங்​கிக் கணக்கு தொடப்​பட்​டது.​

 

Follow Us:
Download App:
  • android
  • ios