MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்சி டூ சென்னை ப‌கல் நேர புதிய ரயில் வந்தாச்சு.. பயணிகளுக்கு ரயில்வே சொன்ன குட்நியூஸ்!

திருச்சி டூ சென்னை ப‌கல் நேர புதிய ரயில் வந்தாச்சு.. பயணிகளுக்கு ரயில்வே சொன்ன குட்நியூஸ்!

இந்த ரயில் 2ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், ஏசி சேர் கார் பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். செவ்வாய் மற்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் 5 நாட்களும் இயக்கப்படும்.

1 Min read
Author : Rayar A
Published : Feb 03 2026, 10:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தென் மாவட்ட ரயில்களுக்கு கிராக்கி
Image Credit : Google

தென் மாவட்ட ரயில்களுக்கு கிராக்கி

இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான். திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் மலைக்கோட்டை மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
திருச்சி டூ தாம்பரம் பகல் நேர ரயில்
Image Credit : our own

திருச்சி டூ தாம்பரம் பகல் நேர ரயில்

இந்த கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்துக்கு பகல் நேர சிறப்பு ரயில் இயக்கி வந்தது. இந்த சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திருச்சி-தாம்பரம் (வண்டி எண்: 16807), தாம்பரம்-திருச்சி (வ.எண்: 16808) என இந்த ரயில் இனி நிரந்தர ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் இயக்கபடும்

இந்த ரயில் திருச்சியில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருச்சி வந்தடையும். இந்த ரயில் 2ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், ஏசி சேர் கார் பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். செவ்வாய் மற்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் 5 நாட்களும் இயக்கப்படும்.

33
இந்த ரயில் எங்கெங்கு நிற்கும்?
Image Credit : our own

இந்த ரயில் எங்கெங்கு நிற்கும்?

இந்த ரயில் திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். முன்னதாக, இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என மதிமுக எம்.பி துரை வைகோ ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து துரை வைகோ ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி பயணச்சீட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Related Stories
Recommended image1
திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. 11 பொதுபெட்டிகளுடன் புதிய ரயில்..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Recommended image2
இந்தியாவின் விசித்திர ரயில் நிலையம்.. பெயரே கிடையாது.. ஆனால் ரயில் நிற்கும்.. டிக்கெட் கொடுப்பாங்க.. எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved