- Home
- Tamil Nadu News
- திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. 11 பொதுபெட்டிகளுடன் புதிய ரயில்..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. 11 பொதுபெட்டிகளுடன் புதிய ரயில்..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
திருவனந்தபுரம் முதல் தாம்பரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயிலில் 11 பொது பெட்டிகள் உட்பட 21 பெட்டிகள் இடம் பெறுகின்றன.

அம்ரித் பாரத் ரயில்
பிரதமர் நரேந்திர மோடி நாளை கேரளா, தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது தாம்பரம், திருவனந்தபுரம் இடையேயான புதிய அம்ரித்பாரத் விரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார். காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் புதிய ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
நின்று செல்லும் ரயில் நிலையங்கள்
குழித்துறை, நாகர்கோவில் டவுண், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரயலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
11 பொது பெட்டிகள்
மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலுக்கான வழக்கமான நேர அட்டவணை பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் 11 பொது பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

