MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • அதிமுக மாஜியுடன் திமுக அமைச்சரின் அட்ஜெஸ்ட்மெண்ட்..! குமுறும் அறிவாலயம்..!

அதிமுக மாஜியுடன் திமுக அமைச்சரின் அட்ஜெஸ்ட்மெண்ட்..! குமுறும் அறிவாலயம்..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகுபதி, மெய்யநாதன் என 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், மாவட்டத்தில் செல்வாக்காக இருப்பது விஜயபாஸ்கர் தான்.

1 Min read
Author : Thiraviya raj
Published : Feb 03 2026, 11:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : our own

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மாவட்டத்தை கட்டி ஆள்வது அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என திமுகவிலேயே வெளிப்படையாக பேசிக் கொள்கிறார்கள். இது அறிவாலயத்தின் காதுகளுக்கும் எட்ட, விஷயம் சீரியஸாகி இருக்கிறது என்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகுபதி, மெய்யநாதன் என 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், மாவட்டத்தில் செல்வாக்காக இருப்பது விஜயபாஸ்கர் தான். அதிமுக ஆட்சியில் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதிகளில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கருணாநிதிக்கு சிலை வைக்கவேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட உடன்பிறப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை இரண்டு அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை.புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மட்டும் ஒரு கருணாநிதி சிலை இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image Credit : our own

பொது இடத்தில் வைக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறாமல் இருக்க, இந்த விஷயத்தை புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட, அது மாவட்டம் தாண்டி, மாநில முழுக்க தீயாக பரவி இருக்கிறது. விஜய பாஸ்கர் மீது ரகுபதி பரஸ்பரம் பெரிய குற்றச்சாட்டுகளை முன் வைக்காமல் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

33
Image Credit : our own

கனிம வளத்தை கையில் வைத்திருக்கும் அமைச்சர் ரகுபதி, விஜயபாஸ்கரின் திருவேங்கை வாசல் குவாரிகளில் முறைகேடுகள் இருக்கிறது என்றும், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்கிறது என்றும் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை மட்டுமே ரெய்டுகளை நடத்த, மாநில கனிமவளத்துறை விஜயபாஸ்கர் பக்கமே போகவில்லை என்றும் மாவட்ட திமுகவில் குற்றம் சாட்டுகின்றனர். ரகுபதியும், விஜயபாஸ்கரும் ஒருவரை ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அரசியல் செய்வதாக அறிவாலயத்திற்கு புகார்கள் பறந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்

About the Author

TR
Thiraviya raj
திமுக
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Recommended image2
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
Recommended image3
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!
Related Stories
Recommended image1
செல்லூர் ராஜுவை ஓட விட்ட திமுக அமைச்சர்..! அதிமுக- பாஜகவுக்குள் சிக்கல்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved