காஞ்சிபுரம்

கொளத்தூரில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் பகுதியில் வாகனங்களின் டயர்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்தத் தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என மொத்தம் 1500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

நிரந்தர தொழிலாளர்கள் சுமார் 350 பேர் தங்களுக்கு கடந்த ஐந்து வருடங்களாக முறையான ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைக்க நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரினர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலையின் நுழைவு வாயில் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.